சரித்திரம் செய் மகளே

சரித்திரம் செய் மகளே
நீ தரித்திரம் இல்லை மகளே
முத்திரை நீ பதி மகளே
பிறர் முகத்திரை நீ கிழி மகளே .....

கள்ளிப்பாலில் நீ காலமானாய்
கருங்கல்லினால் உள்ளம் கொண்டதனால்
தொல்லையாய் உன்னை எண்ணுபவர்க்கு
துணிந்து நீ பாடம் புகட்டு ......

ஆணென்னும் பெண்ணென்னும் இரண்டு பேதம்
வாழ்கின்ற மனிதரில் இருக்கும் வேடம்
பொய்யாய் புகழ்ந்திட பலருமுண்டு
உன்னை மெய்யாய் உயர்த்திட யாருமில்லே ......

வலிகளை சுமந்தாளே சிற்ப்பமாகும்
தத்துவம் தானே உனக்கு சேரும்
உலிவலி தாங்கிடும் பெண்ணே நீயோ
உருவம் பெற்றாலே கடவுள் தானே ......

இமயம் கூட இலக்காகும்
வானம் உந்தன் வசமாகும்
நெஞ்சிலே நம்பிக்கோ கொண்டுவா நீ
நிச்சயம் வெற்றிகள் படைத்திடுவாய் .......

வஞ்சிக்கும் பலரை இனி கெஞ்சாதே
அவர் நெஞ்சத்தில் நீயும் கீறலிடு
துன்பத்தில் துவண்டிடும் நிலை வேண்டாம்
என்னிலை போயினும் துனிவாயே......

சாதனை எவர்க்கும் சொந்தமில்லை
சோதனை எவர்க்கும் உறவுமில்லை
சரித்திரம் உனக்கும் சொந்தமாகும்
சாதனை உன்னில் அங்கமாகும் .......

உலகினை படைத்த கடவுளே நீ
உள்ளம் நொந்திடல் ஆகாது
உடலிலே பலவீனம் இருந்தாலும்
உள்ளத்தை பலமாய் ஆக்கிவிடு .......

எழுதியவர் : வினாயகமுருகன் (22-Mar-14, 5:27 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 93

மேலே