என் காதல் கதை பகுதி 15
நினைவுகள் வந்து போகும் தந்தியாய்
மறக்க நினைக்கையில் வந்து போகும்
மின்னலாய் கண்களிலும் மனதிலும்
என் வாலிப வறண்ட நிலத்தில்
காதல் மழை இன்றி............
தொடர்ந்தேன் நாட்களை
சிந்தனை மாற்றி செல்லும் திசையை
ஏனோ மயிலிறகும் காயம் கொடுக்கிறது
இரவில் கனவுகளும் பயமுறுத்தி
விடிகிறது எல்லா இரவுகளும் .....
முதன் முதலாய் மீண்டும் ஒரு ஈர்ப்பு
உயிரில் சிறகடிக்க மனதில்
ஏனோ ஒரு பயம் இருந்தும்
விலகிட மனமில்லை
அவளருகில் அவள் நிழலில் ....
எனக்கானவள் என கருதி
எனக்கும் அவளுக்குமான பொருத்தம்
நான் அதையும் யோசிக்க மாட்டேன்
எனக்காக என்று அவளும் அப்படிதான்
எதையும் யோசிக்க மாட்டாள்
எனக்காக என்று .................
இருந்தும் நேசம் தொடர்ந்து
அவள் மேல் நாளுக்கு நாள்
என்னோடு பேசாது போனால்
அவளுக்கு வலிக்கும் என நினைத்தேன்
அந்த சுவடு இல்லை அவளிடம்
ஏனோ எனக்கு மட்டும் வலிக்கிறது
அவள் என்னோடு பேசாது போனால்
மீண்டும் தொட்டிடும் ஆசை
மரணம் என்னும் காதலை ...........
இன்னும் தொடரும் என் காதல் கதை