கருவறை இலக்கணம்

என் அழும் குரலை
முதல் முதலாய்
ரசித்தவள்...
நான் கேட்ட
முதல் இசை
உன் தாலாட்டு....
உன் இதழ் தந்த
முதல் முத்தம்
இன்றும் இனிமையாய்....
நீ மடியில் கட்டிய
தொட்டிலில் உறங்குகிறேன்
இன்றும்
கவலைகள் வரும்போது....
இன்றும் நனைகிறேன்
மழையில்
உன் சேலை
துவட்டலுக்காக.....
அம்மா.....

எழுதியவர் : (20-Feb-11, 6:29 pm)
சேர்த்தது : ramesh harish
Tanglish : karuvarai ilakkanam
பார்வை : 506

மேலே