கயல்விழி காமுகியே !


என்னவளே!
ஏன் மறுக்கிறாய் ?
என்னில் என்னை விட,
உன்னில் போக‌
உனக்கு மனமில்லையோ?

குழைந்தைத்தனம் மாறாமல்
குறும்புடன்
கிறங்கிக் கொண்டிருந்தேன்
கில்லி போல நான்.

அரும்பு மீசை வந்தவுடன்
அனைத்தும் மறந்தேன்,
அழகே உனைத் தவிர‌

சட்டை, பாவடையுடன்
சலங்கை ஒலிபோல‌
ஒலித்துக் கொண்டிருந்த‌
உன்னிலும்

பருவமடைந்தவுடன்
பாவாடை தாவணியில்,
பவ்யமாய் நீ
நம்ப முடியவில்லை என்னால்

பேச மறுக்கிறாய்
காண மறுக்கிறாய்
கலங்குகிறது இதயம்
கண்ணீரோடு..

நிலவில், மழையில்
ஒளியில்,நீரில்
பாரில் எங்கும்
உன் முகம்

என் முகம் மறந்துவிட்டது
எனக்கு இப்போது

விழியே !
விலகியே இருந்து
விரைக்க வைக்கிறாயே
விசித்திரமான பெண் தான் நீ

கயல்விழி காமுகியே !
புயல்வெளி பூச்சரமே !

ஏன் மறுக்கிறாய் ?
என்னில் என்னை விட...

குட்டி











எழுதியவர் : (20-Feb-11, 6:14 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 541

மேலே