நான் தரும் கவிதை

நான் தரும் கவிதை
----------------------------

கற்பனைகள் ஓடிவிட்டால்

கவிதை ஏது -அதனால்

கற்பனையைப் பூட்டி வைத்தேன்

கவிதை வடிவில்


பெரும் காப்பியம் அமைக்க

நான் இளங்கோவும் அல்லன்

இதிகாசங்கள் தந்திட

கவி கம்பனும் அல்லன்

தாய்த் தமிழில் தேன் தமிழில்

பெரும் மோகம் கொண்டேன்

தாகம் தீரவில்லை

துணிந்து கவிதை எழுத முடிந்தேன்



என் கவிதைக்கு நான்

இலக்கணம் ஏதும் அமைத்திடவில்லை

தானாக அது வந்தமர்ந்தால்

மிக்க மகிழ்ச்சி கொள்வேன்

படிக்கும் நீங்கள் கண்டறிந்து

எனக்கதை சொல்லிடவேண்டும்


இலக்கணப் பாக்கள் வடித்திட

பெரும் நாட்டமுண்டு -அந்த நாள்

கூடிவரும் காத்திருப்பேன்


இலக்கணமும் கற்பனையும் கூடிவந்தால்

இலக்கியமாய் அமைந்திடாதோ

என் கவிதைக் குவியல்

---------------------

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (23-Mar-14, 6:45 am)
பார்வை : 121

மேலே