மறந்துவிடாதே தமிழா

உலக வரலாற்றை நோக்கடா
அனைத்தையும் ஆரம்பித்தது
தமிழன்தானடா !...........

கட்டிட கலையில் சிறந்தவன்
தமிழன்!
காதல் கலையில் மிளிர்ந்தவன்
தமிழன்!
கலாச்சாரத்தில் உயர்ந்தவன்
தமிழன்!
இயற்கையை தெய்வமாய் பார்த்தவன்
தமிழன்!
விஞ்ஞானத்தை கண்மூடியே கூறியவன்
தமிழன்!
மெஞ்ஞானத்தை உலகிற்கு உணர்த்தியவன்
தமிழன்!
அள்ளியள்ளி அனைவருக்கும் கொடுப்பவன்
தமிழன்!
முல்லைக்கே தேர்கொடுத்தவன்
தமிழன்!
அனைவர்க்கும் அறிவுரை கூறுவான்
தமிழன்!
தன் இனத்திற்கான முதற் போராளி
தமிழன்!
தூக்குமேடை பஞ்சுமெத்தை என்றவன்
தமிழன்!
காற்றாட்டு வெள்ளத்தையே
கமண்டலத்தில் அடக்கினான்
தமிழன்!

ஆனால் இன்று !

கோயில் பூனைக்கு
பக்தி இருக்காதாம்-அது
தெருவில் ஓடும் எலியையும் பிடிக்கும் -திரு
உருவில் ஓடும் எலியையும் பிடிக்கும்

தன்பெருமை தெரியாததால்தான்
அடுத்தவன் பெருமை பேசுகிறோம் நாம்

மறந்துவிடாதே தமிழா!
சிந்துவெளியிலேயே
முத்தெடுத்தவன் நீயென்பதை
என்றைக்குமே
மறந்துவிடாதே!

எழுதியவர் : TP Thanesh (24-Mar-14, 3:10 pm)
பார்வை : 119

மேலே