என் கண்கள் ஈரமாகும் நேரம் 555

அழகே...

என்னை உயிராகவும் உணர்வாகவும்
நினைக்கிறன் என்றாய்...

என் உயிர்
நீயாக இருக்க...

உன் உயிராய் யாரடி
உன் நெஞ்சில்...

வார்த்தையில்
மட்டும் தானடி...

நான் காணும் மலரெல்லாம்
நீயென நினைத்து...

நந்தவனத்தில்
நித்திரை...

என் நித்திரை
கலையுமுன்னே...

என் நந்தவனம்
சருகானதடி...

என் கனவிலும் நினைவிலும்
உன்னை நினைத்து...

என்னை நான்
மறந்தேனடி...

என் கண்களில் கண்ணீரை
வார்த்த கார்மேகமே...

என் நககன்னிலும்
வேண்டுமடி கண்கள்...

நான் கண்ணீர் வடிக்க...

உருகுகிறேன் தினம்
கண்ணீரில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Mar-14, 9:02 pm)
பார்வை : 288

மேலே