-அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்- சிறு குறிப்பு03

-அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்- சிறு குறிப்பு:...(03)
வாய்பாடு :03 ------மா மா மா
----------------------------------மா மா மா
எ-டு:
ஈடும் இணையும் இல்லா,
==ஏதேன் அழகுத் தோட்டம்;
தேடல் அறிந்த தில்லை;
==தேவை இருந்த தில்லை;
கூட நடந்த கர்த்தர்
==குலவி, மகிழ்ந்த நாட்கள்!
கேடு வந்தி ழக்கக்
==’கிளர்ச்சி’ தந்தான் சாத்தான்!....------[எசேக்கியல்காளியப்பன்]
இதன் வாய்பாடு
தேமா/ புளிமா/ தேமா என்று முதல் இரண்டு அடிகளிலும்,
தேமா/ புளிமா/ தேமா, புளிமா/ புளிமா/ தேமா என்று மூன்றாவது
அடியிலும்;
தேமா/ தேமா/ தேமா, புளிமா/ தேமா/ தேமா என்று நான்காவது
அடியிலும் இருப்பதைக் காணலாம்;

வாய்பாடு :04 ------- மா காய் காய்
---------------------------------------மா காய் காய்

எ-டு:
பாங்/காய்/ ஒளி/பரப்/பிச்/ செங்/கதி/ரோன்/
==பா/ரின்/ இரு/ளகற்/றத்/ தான்/வரு/வான்/;
தூங்கிக் கிடப்பவரைத் தன்கரங்கள்
==துள்ளி எழுப்பிவிடத் தான்வருவான்!
நீங்கும் பனித்திரையும், நேமியவன்
==நீட்டும் கரங்களினால்! அவன்வரவுக்(கு)
ஏங்கும் கமலப்பெண், இதயத்தே
==ஏக்கம் தீர்ந்துபட எதிர்வருவான்! ------[ எசேக்கியல்காளியப்பன் ]


வாய்பாடு :05 -----------விளம் மா காய்
-----------------------------------------விளம் மா காய்

எ-டு:
வறியவர்க் கொன்றும் ஈயாமல்,
==வளர்த்தவர் தம்மைப் பேணாமல்
சிறியவர் வாழ்வில் நலம்சேர்க்கும்
==சிறந்தனற் கல்வி கூட்டாமல்
வெறியனாய் வாழ்ந்து சுயனிறைவே
==விரும்பிடு கின்ற கயவுருவாய்
மறியெனத் துய்த்து மரியாதே!
==மரித்தெழுந் தவரை நினைனெஞ்சே! ------[எசேக்கியல்காளியப்பன்]

வாய்பாடு :06 ---------------விளம் விளம் விளம்
-----------------------------------------------விளம் விளம் விளம்

எ-டு:
பாற்கடல் அழகென அமுதெனப்
==பழந்தமிட் சுவையென அறிவென,
நாற்கடல் அலையென உணர்வென
==நாநில வளமென உருவென
வேற்கடை நுனியென நிறையென,
==வெங்கதிர் ஒளியென உயர்வென,
மாற்கடல் எனதுயிர் குடித்திட
==மனங்கவர் அவளுருத் தோன்றுமே! ---[ எசேக்கியல்காளியப்பன் ]

-----------+++++++ -- இன்னும் வரும் --+++++----

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (25-Mar-14, 10:23 am)
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே