+இதயம் இணைந்ததும் கவிதையெழுந்தது நிஜம் தானோ+

இது தானோ இங்கு
இயல் தானோ
விதி தானோ நம்
விழல் தானோ
உன்னில் விழுந்தது
நான் தானோ
என்னில் விழுந்தது
நீ தானோ
நம்மில் விழுந்தது காதலெனும்
நிஜம் தானோ
அன்பில் விழுந்தது
சரி தானோ
ஆசை எழுந்தது
முறை தானோ
இதயம் இணைந்ததும் கவிதையெழுந்தது
நிஜம் தானோ
உன்னை பிடித்தது
நான் தானோ
என்னை பிடித்தது
நீ தானோ
நம்மை பிடித்தது காதலெனும்
நோய் தானோ
கதைக்க பிடித்தது
சுகம் தானோ
முறைச்சு சிரித்தது
மனம் தானோ
ஆசை வளந்ததும் பேச்சு மறந்தது
நிஜம் தானோ