வெற்றிக்கான தேடல்
தேடல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அற்புத திறனாகும்
தேடல் உடையவனே தேவைகள் உடையவன் என்று கூட கூறலாம்
தேவைகள் அல்லது தேடல் என்பது ஒருவரின் இலட்சியம் ,கனவு ,எண்ணங்கள் ,விருப்பம் என பல மொழி கொண்ட ஒரு சொல்லென எடுத்துரைக்கலாம்
தேடல் இருளடைந்த மனதிலும் , வாழ்விலும் ஒளி அளிக்கும் சூரியன்
தேடல் தோல்வியிலிருந்து வெற்றிக்கு வழி வகுக்கும் பாலம்
தேடல் வெற்றியின் இரகசியம்
தேடல் மனதில் உற்றெடுக்கும் சாதனை துளிகள்
தேடல் துன்பம் எனும் குப்பையை சுத்தம் செய்யும் துய்மையாக்கி
தேடல் என்பது நமது மனம் அடைய துடிக்கும் சிகரத்திற்கு செல்லும் வழியாகும்
ஒவ்வொருவரின் மனதிலும் நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனும் எண்ணம் மனதில் தோன்றும் அந்த எண்ணமே தேடலாகும்
நம் மனம் அடைய துடிக்கும் வெற்றி எதற்காக எந்த செயலில் என்பதை நாம் முதலில் உறுதி செய்யவேண்டும் பின் அந்த வெற்றியை நாம் எவ்வாறு எட்ட முடியும் என்பதை பற்றிய தேடலை துவங்க வேண்டும்
தேடல் என்பது நமது மனம் அடைய துடிக்கும் சிகரத்திற்கு செல்லும் வழியாகும்
அந்த வழியை மட்டும் கண்டறிந்தால் நம்மால் வெற்றி பெற முடியுமா என்றால் முடியாது ஏனென்றால் அதற்க்கான வழிமுறைகள் என்று ஒன்று உள்ளதல்லவா அந்த வழிமுறைகளை பின் பற்றினால் மட்டுமே நம்மால் சரியாய் வெற்றியெனும் சிகரத்தின் உச்சியை அடைய முடியும்
உதாரனமாக ஒரு விவசாயி தனது நிலத்தில் விதைக்கும் நெல்லில் அதிக இலாபத்தை ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உள்ளது அந்த விருப்பம் அவரது வெற்றியின் தேடலாகும்
அவர் அந்த தேடலில் வெற்றி பெற வேண்டும் என்றால்
1.தகுதியான, நேர்த்தியான நெல் விதைகளை அவர் வாங்க வேண்டும்
2.அந்த நெல்லை விதைப்பதற்கு தகுதியாக தனது நிலத்தை பண்படுத்தி வைத்திருக்க வேண்டும்
3.தேவையான ஈரப்பதத்திலும் , சரியான கால நிலைகளிலும் விதைக்க வேண்டும்
4. ஒவ்வொரு நெல் நாற்றிக்கும் இடைவெளி சமமாகவும் சரியானதாகவும் ,சூரிய ஒளிக்கு ஏதுவாகவும் நடவு செய்யவேண்டும்
5.பின்பு எந்த காலகட்டத்தில் எவ்வளவு விகிதத்தில் உரம் இடவேண்டும் என்பதையும் அறிந்து அவர் செயல்பட்டால் தான் அவரால் வெற்றியை அடைய இயலும்
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு சிறு எடுத்து கட்டு தான் இது போல் ஒவ்வொரு செயலுக்கும் வெற்றி பெறுவதற்கு வழிமுறை உள்ளது
அந்த வழிமுறைகளை தேடல் செய்து பின்பற்று பவர்களே வெற்றியாளர்கள் ஆவர்கள்
தனது விருப்பத்தை அடையும் வழியில் இருந்து விலகுபவர்களும் ,இது நமக்கு சரிபட்டு வராது என்று சொல்பவர்களும் முயற்சி செய்யாதவர்களே
இது போன்ற முயற்சியற்றவர்களின் அறிவுரைகளை பின் பற்றுபவர்களும் தோற்றுத்தான் போகிறார்கள்
உங்கள் மனதின் தேடலுக்கு உங்களால் தான் விடையளிக்க இயலும் ,இதற்காக நீங்கள் அடுத்தவர்களை நாடுவது உங்கள் வயிற்று பசிக்கு அடுத்தவர்களை உண்ண சொல்வது போல் பொருத்தமற்ற செயல் என்பதினை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்
அதற்காக நான் ஆன்றோர்,சான்றோர்களிடம் அறிவுரை பெறுவதை தவறு என்று கூறவில்லை அந்த அறிவுரைகளில் எவை உங்களது தேடலுக்கு பொருத்தமானவை ,எவை தேவை என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய இயலும்
ஏனென்றால் உங்கள் மனதின் தேடலின் முழுமையினை உணர்ந்தவர் நீங்கள் ஒருவர் மட்டுமே
ஒரு சிலர் தன் மனம் சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பார்கள் ,மற்ற சிலர் தன் மூளை சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பார்கள்
எவன் ஒருவனுக்கு மூளையும்,மனமும் ஒன்றாக ஒரே சிந்தனையை அளிக்கிறதோ அவனே வெற்றியாளன் ஆகிறான்
அவனின் மூளையும்,மனமும் ஒரே சிந்தனையை அளிக்க காரணம் அவனது செயலிலும் சிந்தனையிலும் வெற்றியை அடைய வேண்டும் எனும் எண்ணமே உள்ளதே காரணம்
நான் வரலாற்றில் படித்த ஒன்றை தங்களிடம் தேடலுக்கு எடுத்துக்காட்டாக பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்
கிரேக்கப் பேரரசின் இரண்டாம் பிலிப்பின் மகன் அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையின் மீது ஆசை வந்தது எனவே அந்த குதிரை எதற்காக அடங்காமல் அடங்காமல் உள்ளது எனபதினை தனது தேடலாக எடுத்து கொண்டு தான் அவர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். எனவே அதை வேறொரு இடத்தில நிறுத்தினார் பின் அக்குதிரையனது மிரள வில்லை அதை பழக்கபடுத்தி தன் குதிரையாக வைத்து கொண்டார் மாவீரன் அலெக்ஸாண்டர் என்று கூட கூறலாம்
ஒவ்வொரு விடியலையும் ஏதேனும் ஒரு தேடலுடனும் வெற்றியை அடையும் இலக்குடனும் துவங்குவோம்
ஒவ்வொரு இரவையும் தேடலை அடைந்த அல்லது அதற்க்கான வழியை அடைந்தோம் எனும் மகிழ்வோடு துயில் கொள்வோம்