அரசியல்

அரசி(யாள்)யல்
நாட்டின் அரசி நான்
அவலநிலை எனக்கே...
ஆளுமை என்னுடன் இருந்தும்
ஆளும் வர்க்கமே ஆளுகிறதே...
உன்னத நிலை இருந்தும்
ஓட்டையாய் சட்டங்கள் ...
உச்சியில் ஆளுபவர்களால்
ஊசலாடும் ஏழைமக்கள் . ..
ஊடகங்களும் பிறழும்
ஊக்குவித்து உவகைகொள்ளும்
எகினன் படைத்த பிறவிகள்
ஏகபிழை செய்கிறார்கள்
என் கீழ்நிலை குலைந்து
கீர்த்தி பெறுவது எப்போது ....
ஏக்கமுடன் காத்திருக்கிறேன்
காக்க வருவார்கள் என்பிள்ளைகள்...
எழுதி வைத்த காகிதத்தை
கரையான்கள் அழிக்கும் முன்னே
தூய்மையான உள்ளம் கொண்டு
தூக்கிவிட வாருங்களேன்...
-வைஷ்ணவ தேவி