வேகத்துக்கு ஒரு வேண்டு கோள்
வேகமாக போங்க சாலையில
வேகமாக போங்க .
வேண்டாமின்னு சொன்னா- நீங்க
கேக்கவா போறீங்க , இளசுகளே
வேகமாக போங்க - ஆனால்
விவேகமாக போங்க!
சாலை விதியை மதியுங்க
தலை விதியும் மாறுங்க !
ஒருவர் பின் ஒருவராய்
பாங்காய் சாலையில் செல்லனும்
முந்தி நீங்க போகணுன்னா
முறையா யதைச் செய்யணும் !
ஒலி எழுப்பு ; ஓரம் கேளு ,
பதில் கிடைக்கும் ,
பார்த்துச் செல்லு!
வளைஞ்சு வளைஞ்சு
வண்டி ஓட்டி
வம்பு செய்ய வேண்டாமே,
வழுக்கி விழுந்து மண்டை உடைஞ்சு
மரணம் தழுவ வேண்டாமே!
கை கால்கள் இழந்து விட்டு -வாழ்வை
கட்டிலிலே கழிக்கனுமா
கட்டிய மனைவி கூட
காறிஉன்னை துப்பனுமா ?
வேண்டாமே விவகாரம்
விளையாட்டு சேதாரம் ,
பத்திரமா வீடு சேரு- உன்ன நம்பி
புள்ளகுட்டி காத்திருக்கு ,
பொண்டாட்டி
தாய் தகப்பன் உயிரெல்லாம்
உன்னோடு கலந்திருக்கு !
வேகமாக போங்க
சாலையிலே ..
வேண்டாமுன்னு சொன்னா
நீங்க-இளசுகள்
கேட்கவா போறீங்க -போங்க
வேகமாக போங்க ... ஆனா
விவேகமா போங்க !