வளர்ப்பு மகள்
ஆணா, பெண்ணா ?
பாகுபாடு தெரியாமலேயே
எடுத்துவந்தேன்.
தெரிந்தபின்" செல்வி"
எனபெயரிட்டேன் .
பாலுட்டினேன்,
படிக்கவைத்தேன்
ஓவியம் வரைந்தாள்,
நாட்டியம் கற்றாள்,
பாட்டு பயின்றாள்,
பண்பாடும் பயின்றாள்,
பூவுக்கும் பெண்ணுக்கும்
இரு வீடு ...
கதிரறுக்கும் காலம் ,,,.
மணந்தாள் மணமகனை ...
இவள் நான் பெற்ற மகள் அல்ல ...
வளர்ப்பு மகள் ...
மூளைக்கும் , இதயத்திட்கும்
நன்றாகவே தெரியும் ...
இருந்தும் இரண்டும்
செயல்படவில்லை ...
அவள் சொன்னாள்...
எல்லோருக்கும்
பெற்றோர் இருவர்
எனக்கு ஒருவருக்குள்
இருவர்...
நான் கையசைத்தேன்,
இதயக்கூட்டை பிய்த்துக்கொண்டு
பறந்தது மனப்புறா...
அவள் மௌனச் சொற்களால்
வாயசைத்தாள்...
கண்கள் மூடி மௌனித்தேன்
இதயம் சொன்னது.
இனி எதையும் வளர்க்காதே ...
இனி என்னால் வளைய முடியாதே
சோகத்தோடு க நிலவன்