பசலை

பசலை
வளையல்கள் என்னதுதான் சொல்லுது?
கழன்றுதானே கைநழுவி தரைவீழுது.
நிலையிலென்ன அய்யய்யோ களைமாறுது!
நெடுமூச்சு தான்வாங்கி நிழல்சோருது.
மெலிந்துடல் உள்வாங்கி துரும்பாகுது.
மேனிபசந்து நிறம்மாறி குறும்பேகுது.
குழிவிழுந்து விழியேங்கி கருப்பாகுது.
மொழிகுறைந்து தடுமாறி மறுப்பாகுது
இடைவிலகி உடைவழுகி தடைமறுகுது
சடைகலைந்து பறந்தாடி அலைபாயுது..
குழல்சிவந்து தழலாகி அழலாடுது..
விழலாக வீணாகி நிலம்சாகுது.
கடல்பொங்கி கண்வழியே தானோடுது
மடிமழுங்கி குறியொடுங்கி தான்மூடுது.
கிடைகிடந்து நடைதளர்ந்து தள்ளாடுது.
விடைதொடர்ந்து விதிநினைந்து உயிராடுது.
கதவிருந்தும் காத்திருந்து கண்விழிக்கிறாள்.
சதமென்றும் கொண்டவனை கண்வைக்கிறாள்.
இதம்பழகிப் போனவனை இதயமென்கிறாள்.
பதமாகத் தானுருகிப் பசலையாகிறாள்.
கொ.பெ.பி.அய்யா.
கள்வன் எவனோ!///////186182////உள்ளம் கொள்ளை