இயற்கையது விந்தை

காலன் வீசும் அம்பு
காற்று
சிறகொடிந்து வீழும்
தென்னங் கீற்று!!

காதல் வலை வீசும்
கதிரவன்!!
முகமலர்ந்தே கண் சிமிட்டும்
செம்மலர்கள்!!

இயற்கையை ஒப்பனை செய்யும்
பனித்துளிகள் - பூ
இதழ்களில் வடியும்
தேன் துளிகள்!!

கதிரவன் தொடுத்தான்
கதிர் வேலை!!
உடனிடம் விட்டொ ளித்தான் பனி
காலை வேளை!!

இதழ் சுவைக்க விரைந்தன
கருவண்டுகள்!!
காதலன் தூதென பணிந்தன
மலர் செண்டுகள்!!

பின்னிசை இசைத்தன
தாவரப் பட்சிகள் - அதில்
பரவசமாய் மேலெழுந்தான்
பகலோன் கதிரவன்!!

இதழசைத் தழைக்கும் - காதல்
கொள் மலர்கள் - அதனால்
உணர்வுகள் சூடாகியே எரிக்கும்
காவலன் அருக்கண்!!

ஊடலில் கூடல் கொண்டது
இயற்கை!!
பிரிந்த காதலனைஎண்ணியே வாடியது
நறுமண யாக்கை!!

எழுதியவர் : ஜவ்ஹர் (27-Mar-14, 12:03 pm)
பார்வை : 73

மேலே