நதிக்கரை மணலில்

முழுமதி ஒளியில் நதிக்கரை மணலில்
=====கதைகள் பேசிக் களித்தோமே...!!
தழுவிடும் தென்றலில் இதயம் சிலிர்க்க
=====கனவில் கலந்து லயித்தோமே....!!
பொழுதுகள் புலரும் வைகறை விடியலில்
=====நம்மை மறந்து துயின்றோமே ...!!
நழுவிடும் துகிலின் வனப்பில் மயங்கி
=====ஞாயிறும் ரசித்திட எழுந்தோமே ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Mar-14, 7:44 am)
Tanglish : nathikkarai MANALIL
பார்வை : 111

மேலே