அழுகாச்சி !..
காலைக் கதிரவன் கதிரொளி வீச
வாடைக் காற்று வசந்தம் வீச
வான் நிலவு இருள் தனை நீக்க
இத்தனை இருந்தும் இனிமை இல்லை
இன்பமெனும் இசை மீட்ட!..
காலங்கள் கடந்ததால்
காசு பணம் வேண்டுமென்று
கடல் கடந்து வந்து விட்டேன்
காசுக்காக கஷ்டத்தோடு...
மறக்கத்தான் முடியவில்லை
மாறிப்போன அந்நாட்கள்!...
சொந்தங்கள் சூழ சொர்க்கத்தில் நான் மிதக்க
பந்தங்கள் பரிவோடு பாசத்தில் நான் திழைக்க
நான் பெற்ற இன்பம் நான் என்னே சொல்ல ?
இன்று
நண்பர்கள் நட்பில் நான் கழித்த அந் நாட்கள்
நாளிகையில் போய்விட
பிரிவு எமை வென்றுவிட்டு
பெருமை பீத்திக்கொண்டது !..
காலை முதல் மாலை வரை
காளை போல் திரிந்துவிட்டு
சாயங்காலம் வந்துவிட்டால்
சாய்ந்துறங்க தாய்மடி தவமிருக்க
தாயோ பலகாரங்கள் பல செய்து
பத்து மணி வரை காத்திருக்க
பாசத்துடன் திட்டிய தந்தையோ
பாய் விரித்து உறங்க வைக்க என
அத்துனையும் பிரிந்து தவிக்கிறேன்
இன்று ஓர் அனாதையாய்!..
சிறுவனாக நான் கழிந்த அந்நாளில்
திண்பண்டம் திருவிழா புத்தாடை என
பெற்றோரை நான் சார்ந்திருக்க
இன்றோ
பத்து ரூபா வருமா தபாலில்
பார்த்துக்க்கொண்டே பெற்றோர்கள்!..
பக்கத்தில் இருந்து எனை
பார்த்துக்கொள்ள
பாக்கியமில்லை உனக்கு...
பாசம் உறுத்துகிறது உனை
பார்க்கனும் போலிருக்கு எனக்கு....
செல்லமாய் வளர்ந்துவிட்டு
செல்லாதவனாய் இங்கு
எம் புள்ள
வெளி நாட்டில வேல பாக்குறான் என
ஊரில் உரிமையாய் பேசிவிட்டு
அடிக்கடி அழுவது மட்டுமேனோ நம் வீட்டில்
ஆணி அடித்து தொங்க விடப்பட்ட என் அந்த
ஆறு வயது புகைப் படத்தை பார்த்து விட்டால்...
தாயே
உன்னுடன் பேச
உள்ளம் துடித்து
தொலைவிலுள்ள தொலைபேசியகம் வர
வார்த்தை மறந்திருச்சி
வருகுது அழுகாச்சி !..
பொட்டப்பிள்ளயா நீ
அழுகிற ? நண்பன் கேட்க
அடப் போடா
செல்லப் பிள்ள நான்!!!
சிரித்துக்கொண்டே நண்பனிடம்......
குட்டி