தொலைந்த காதல்

தொலைந்த காதல் தேடிச் சென்றேன் அங்கே
நீளமாகவே இருக்கிறது மௌனத்தின் வாக்கியங்கள்..
கலைத்த கருவை தேடிப் பிடித்தால் உயிரும் இல்லை உருவமும் இல்லை
நான் வைத்த காதலும் உனக்குள் கருதானே..
தேனீக்களின் கூட்டை கலைத்து அதில்
முகம் வைத்துக் கொண்டது போலானாது பிரிவின் வலி
இமை மூடிக்கிடக்கிறேன் இரவு பகல் அற்றுப் போனது எனது நாட்கள்
காற்றினூடே மெலிதாய் கருகிய வாசம்
இதயம் தீயிலிட்டு போனாய் நீ
பூக்களின் மீது அமிலக் கரைசல் தெளிக்க உன்னால் மட்டுமே முடியும்
உன் இரத்த நாளங்களில் என்ன நெருப்பா சுரக்கிறது
வார்த்தைகளில் அனல் கக்கிப்போகிறாய்
குவிந்திருந்த நினைவுகள் அள்ளி குப்பையிலிட்டாய்
நிலவு சுடும் என்பதை நேரிடையாக விளக்கி சென்றாய்
மரணம் நிகழவில்லை ஆனால் நான் செத்துப்போனேன்
வறண்டு போனது எனது வார்த்தைகள்
விட்டு போவதற்கா எனை தொட்டுப் பேசினாய்
நரம்பு மண்டலம் வரை உருவிப் போய்விட்டாய்
கோலமிடும் முன்னரே புள்ளிகளில் நீருற்றி விட்டாய்
எனது கண்ணீர் கொண்டு உனது இன்பம் எழுதுகிறாய்
அது கரித்துக் கொண்டே இருக்கும் என்பது புரியவில்லை உனக்கு
காயங்களை காலம் ஆற்றி விடும் ஆனால் வடுக்கள்?

எழுதியவர் : வைகுண்டராமன் ப (29-Mar-14, 11:29 am)
சேர்த்தது : வைகுண்டராமன்.ப
Tanglish : tholaintha kaadhal
பார்வை : 369

மேலே