ஓ ..........தமிழினமே, தமிழினமே !

இலட்ச தீவு என் பாதம்
இமயமலையோ என் சிரம்
நிற்கும்போது இந்தியனாய்
நிலத்தின் விழுந்தேன் தமிழனாய்
தலை இருக்குது தெற்கினிலே
தாள் இருக்குது வடக்கினிலே
இறந்து போனேன் இலங்கையினால்
என்னை புதைத்துவிடுங்கள் சடங்கினால்
தாள் மட்டும் இலங்கைபார்த்து
தலைநிமிரட்டும் தமிழனாய் இமயம் சேர்த்து
இறப்பில்கூட என் காலடியில்
இலங்கைவேண்டும் செய்வாயா ?

எழுதியவர் : . ' . கவி (22-Feb-11, 7:18 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 523

மேலே