குழந்தை
தினமும்
அதிகாலையில் முத்தமிட்டு
எழுப்புகிறாள்
நானும் எழுகிறேன்
ஆனந்தமாய்
சிந்திய சிரிப்பில்
சிந்தனை செய்ய
தூண்டுகிறாள்
ஏதோ சொல்கிறாள்
புரியாமல்
என்ன சொல்கிறாள் என விடை
தேடுகிறேன்
நாம் என்ன செய்கிறோமோ
அதை திரும்ப செய்யும்
கிளி பிள்ளை