நீ தேடும் வேடந்தாங்கல்
இதழ்ச் சிறகை விரித்த
முல்லைப் பறவை
உன் புன்னகை.
இமைச் சிறகை விரிக்கும்
காதல் பறவை
உன் விழிகள்
இதயச் சிறகை விரித்து
அந்தி வான வீதியெல்லாம் என்
எண்ணத்தை எடுத்துச் செல்லும்
வண்ணப் பறவையே
நீ தேடும் வேடந்தாங்கல்
நான் தான் !
----கவின் சாரலன்