கொஞ்சம் இரசிக்கலாம் வா
ஐம்புலன்களை அடகுவைத்துவிட்டு
ஐம்பூதங்களையா அலட்சியப்படுத்துகிறாய்
இன்பங்களை விட்டு விட்டு
இன்னல்களையா கட்டிக்கொள்கிறாய்
இயற்கையை நிராகரித்துவிட்டு
இடர்களை எப்படி சுதாகரிக்கப்போகிறாய்
வா கொஞ்சம் ரசிக்கலாம் வா
கட்டி அணைக்கும் மேகங்கள்
கண்ணடிக்கும் நட்சத்திரங்கள்
கட்டழகு நிலவு
வண்ணம் காட்டும்வானவில்
பன்னீர் தெளிக்கும் கார்மேகம்
கையொப்பமிடும் மின்னல்
விற்ற மீன் "D" ஐ
விற்பனை செய்யும்
வியாபாரியாய் காலைக் கதிரவன்
மனதை மயக்கும் -பொன்
மஞ்சள் கலவையில்
மாலைக் கதிரவன்
வானம்
கண்ணுக்கு விருந்தளிக்கும்
கவலைக்கு மருந்தளிக்கும்
கவிதைக்கு கருத்தளிக்கும்
கற்பனை கருத்தரிக்கும்