விதியின் விளையாட்டு14

ஷிவானியிடம் மனோஜின் அம்மா சம்மதமா?
என்று கேட்டதும் அனைவரும் ஷிவானியின் முகத்தை பார்க்க மனோஜும் பார்த்தான்.

அனைவரது பார்வையும் தன மீது படுவதை உணர்ந்த ஷிவானி வெட்கத்தில தலை குனிந்துவிட்டு,,,,

அப்பா அம்மாவின் முடிவே எனது முடிவு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அவளது முடிவு அனைவருக்கும் திருப்திகரமாய் இருந்தது.......!

மதிய உணவும் முடித்து விட்டு சந்தோஷமாக இருந்தனர்....ஆனால் மனோஜ்க்கு மட்டும் மனது உறுத்தலாக இருந்தது.......

ரிஷாணியை மனதால் நினைத்து விட்டு அவள் அக்காவை.....என்று மனதிற்குள் வருத்தபட்டவன் எல்லாம் விதி என்று நினைத்து திருப்தியடைந்தான்.

ரிஷானியும் பழையது எதையும் மனதில் வைக்காதது போல் புதுமையாய் பேசி வந்தாள்.

ரிஷானியும், ஷிவானியும் மனோஜும் பேசிக்கொண்டிருந்தனர் மொட்டை மாடியில் நின்று.......!

அப்போது மதன் தனது நண்பனுடன் அவ்வழியாக பைக்கில் இவர்கள் வீட்டை நோக்கிக்கொண்டு வரவே! அதை கவனித்த ரிஷானி மெல்ல ஷிவானியின் காலை தனது காலால் உதைத்து அவனை கண் சைகையால் காட்டி கொடுத்தாள்.


ஷிவானி ஆவலோடு மதனை பார்க்க அவளுக்கும் மதனை பிடித்தது போல் புன்னகைத்தாள்???

இது அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தான் மனோஜ் ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை......!

மதன் ஏதோ சோகமாக இருப்பது மட்டும் ரிஷானிக்கு புரிந்தது.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சமயம் ரிஷானியின் தோழி ரிஷானியை பார்க்க வந்தாள்;;;

உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேசணும் கீழே வா என்று அழைத்தாள் அவள் முகத்தில் பயமும் பேச்சில் படபடப்பும் தெரிந்தது.......

ஏய்!என்ன ஆச்சி வருகிறேன் என்று என்று ஆவேசமாக கீழே வந்தாள்..........

ஏன்டி! இப்டி சார் முன்னால மானத்த வாங்குறா?

அதான் வரேன் இல்ல உனக்கு என்னடி அவசரம் என்று கோவப்பட்டாள் ரிஷானி.

இன்னிக்கு மதன்..மதன்...என்று சொல்ல முடியாமல் நின்றாள் தோழி!

சொல்லுடி மதனுக்கு என்ன என்று அதட்டினாள் ரிஷானி???

மதனை ஒரு பொண்ணு காதலித்த விஷயம் உனக்கு தெரியுமில்ல?

ஆமா!அதற்கு இப்போது என்ன? என்று ரிஷானி கோவமாக கேட்டாள்.

அவள் இன்னிக்கு தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்திருக்கிறாள் என்று சொல்ல...!

என்ன........ என்று வாய் பிளந்தாள்!!!!!!!!ரிஷானி.

ஆமாடி! அவள் தற்கொலை செய்ய காரணம் மதன்தான் என்று காலையில் மதனை ஒரு கும்பல் வந்து என்னிடம் பேசிட்டிருக்கும் போது இழுத்து சென்றது அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாள் அவள்?????


இதை கேட்டதும் ரிஷானிக்கு தூக்கி வாரிப்போட்டது.

என்னடி இப்டி சொல்றா?

நான் இப்போதுதான் மதனை பார்த்தேன் இதோ இங்கதான் என்று சொன்னவளுக்கு ஒரே பதற்றம்.....

தனது செல்போனை எடுத்து மதனின் நம்பரை டயல் செய்தாள், ரிங் போய்க்கொண்டிருக்கிறது அவன் எடுத்து பேசவில்லை 5,6முறை ட்ரை பண்ணினவள் செல்போனை போட்டு விட்டு அப்படியே போய் அமர்ந்தாள்......!


ரிஷானியின் தோழி அவள் தோளை பிடித்தாள் பயப்படாதடி ஒன்றும் ஆகாது நல்ல வேளை இந்நேரம் நீ காதலை சொல்லவில்லை என்று பெரு மூச்சு விட்டாள் தோழி!


இல்லடி நான் சொல்லிட்டேன் என்று நிதானமாக பதிலளித்தாள் ரிஷானி.......

எப்போ?என்று புரியாமல் விழித்தாள் தோழி??????????????

பைக்கில் தன் நண்பனுடன் சென்ற மதன் "அன்னை மருத்துவமனை" என்று எழுதப்பட்டிருந்த மருத்துவமனை வளாகத்தில் போய் நின்றான்.

அப்பொழுது போலிஸ் அதிகாரி ஒருவர் அவன் பக்கத்தில் வந்தார்.....




விதி தொடரும்........

எழுதியவர் : ப்ரியா (2-Apr-14, 2:16 pm)
பார்வை : 295

மேலே