ஒருவன்கள்

ஒருவனோடு
பேசிப்
பலநாள் ஆயிற்று !

ஒருவனோடு
பேசி
வருடமிருக்கும் !

ஒருவனை
ஏதோ திருமணத்தில்
எப்போதோ பார்த்தது !

ஒருவன்
தொடர்பு எல்லைக்குஅப்பால்
வெளிநாட்டில் !

ஒருவன்
எங்கேயென்றே
தெரியவில்லை !

ஒருவனிடம்
தீர்க்கவேண்டிய
பஞ்சாயத்து ஒன்று
பாக்கியிருக்கிறது !

ஒருவனது
அலைபேசி எண்ணை
ஒருவனிடம்
கேட்டு வாங்கவேண்டும் !

சட்டென்று
உலகம்
உயிர்பெற்றது !

அட !
வந்து விட்டது
மின்சாரம் !

சீரியல் முடிந்து
இப்போது
விளம்பரம் !
ஓ ......
ஒன்பது மணிக்கு
அந்த அலைவரிசையில்
அந்த நிகழ்ச்சி
இருக்குமே !

எங்கே ரிமோட் ?

அதுவரை
' ஒருவன் ' களைப்பற்றிப்
பேசிக்கொண்டிருந்த
என் மனதிலிருந்த
' ஒருவன் ' ,
பழையபடி
மூலையில் சென்று
முடங்கிக்கொண்டான் !


- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (2-Apr-14, 9:59 pm)
Tanglish : oruvangal
பார்வை : 85

மேலே