இன்று கிருத்திகை-வித்யா

சஷ்டி திதியில் வைத்தேன்
சஷ்டி விரதம்
வாரத்தில் வைத்தேன்
சுக்கிர விரதம்
இன்றும் வைத்தேன்
நக்ஷத்திர விரதம்.......
ஆம் இன்று கிருத்திகை நன்னாள்......!

சரவணப் பொய்கையில்
கார்த்திகைமாதர்கள் அறுவரும்
உரிமை கொண்டாடிட.....
ஆறு கமலங்களில்
ஆறு குழந்தையாக
காட்சியளித்தான்.....
கந்த பெருமான்........!

கார்த்திகை மாதர்கள்
அறுவருமெடுத்து தனித்தனியாக
பாலூட்டி...... உவகையடைந்த
வேளையிலே ......

அறுமுகக் குழந்தையைக் காண
உமாதேவி தன் பதியோடு
வந்திறங்கி... வரம் கேளுங்கள்
என கூற.......

அம்மை அப்பர் தரிசனமே
பாக்கியம் என்றுரைக்க
இவன் உங்கள் மகன்
எனும் பொருளில்
"கார்த்திகை மைந்தன்"
என்றருளினார்...எம்பெருமான்.....!

மை கறை படிந்த இருள்
மெல்ல மெல்ல அகலும்
வைகறை பொழுதில் நீராடி.....
உலர்ந்த ஆடையுடுத்தி.....
கந்தனை சிந்தனை செய்து
மகிழ்ந்தேன்.........!

பங்குனி உக்கிரம்
என் பாதங்களை
பதம் பார்க்க.......
அவன் பாதம் காண
படிகள் ஏறி சென்றேன்.....!

பால் காவடிகளோடான
அரகரா கோசத்தில்
மெய்மறந்து நின்றேன்.......
ஆறு அகல்விளக்கு
ஐந்து எண்ணெய் கலவையில்
ஏற்றி வைத்தேன்....................!

நொடிபொழுதவன்
வள்ளி மணாளன்
தரிசனம் கண்டு........
வேண்டிக்கொள்ள
மறந்துவிட்டேன்......!





எம்பெருமான்
குழந்தை வடிவேலனின்
கடைக்கோடி பக்தை இவள்........!


யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்.........!

எழுதியவர் : வித்யா (3-Apr-14, 8:17 pm)
பார்வை : 280

மேலே