பெயர் தெரியாத பேருந்து காதல் 555

என்னவளே...

முதல் முறை
உன்னை சந்தித்தேன்...

பேருந்து நிலையத்தில்
உன் பெற்றோருடன்...

உன் கேசம்
வருடிய படி...

ஒர கண்ணால்
என்னை பார்த்தாய்...

நான் புன்னகையை
தந்தேன்...

மறுமுறை என்னை
நீ பார்க்கும் போது...

நீ புன்னகையை
தந்தாய் எனக்கு...

நீ காத்திருந்த பேருந்திற்காக
நானும் காத்திருந்தேன்...

நீ செல்லும் இடம்
அறிந்து கொள்ள...

நீ அமர்ந்த பேருந்தில்
நானும் அமர்ந்தேன்...

கையசைவில்
எங்கே என்றாய்...

உன் நினைவில் இருந்த
நான் என்னை மறந்தேன்...

நான் செல்லும்
பேருந்து வேறு என்று...

ஜன்னல் வழியே
கையசைத்தாய்...

உன் முகம் காட்டி...

என் பயணம்
முன்னோக்கி என்றாலும்...

என் நினைவோ
பின்னோக்கி...

உன்னை நினைத்தே...

பெயரை கூட அறிந்து
கொள்ளாமலே இருவரும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Apr-14, 3:57 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 120

மேலே