சொல்

மறைமுகமாக இருந்து ரசித்ததும்
பார்த்த சில நொடிகளில் அதற்காக பயந்ததும்
மௌனம் சந்தித்த பொழுதுகளில்
சிறிய புன்னிகை பூபூத்த நினைவுகளால்
பார்க்காத பார்வை ஆயிரம் கொண்ட கணத்தில்
பார்க்கவே எண்ணிய இதயம்
சொல்லுவதற்காக தயக்கம் கொண்டதும்
சொல்லாமலே காலம் சென்றதும்
காலத்தின் பிடியால் பிரிந்தது சென்றதும்
வாழ்க்கையின் தொலைவால் மறந்து சென்றதும்
மாறி மாறி போனது மண மேடை
மறந்தே போனது அந்த நினைவு
எதிர்பாராத சந்தித்த நேரத்தில்
கண்ணீரும் மில்லை
எந்த ஒரு காயமும் மில்லை
மனம் வருந்தவும் மில்லை
வார்த்தைகள் பரிமாறியது
பார்வைகள் அழகானது
புன்னகைகள் விளையாடுது
இதில் எந்த காதலும் மில்லை
எந்த காமமும் மில்லை




காரணம் சொல்லாத அந்த காதலால்
ஒருவேளை சொல்லியிருந்தால்
என்ன நடந்திருக்கும்.........?

எழுதியவர் : காந்தி . (6-Apr-14, 6:05 pm)
Tanglish : soll
பார்வை : 126

மேலே