பார்த்த நாள்

அந்தி நேர வானம் போல
அழகாய் கண் முன்னே நீ விரிய
எதைப் பார்ப்பது எதை விடுவது
எனப் புரியாது
கண்கள் பரபரத்து
அங்குமிங்கும் அலைமோத
அங்காந்த வாயுடன்
பூமியாய் நான்!
உனைச் சந்தித்து விட்டேன்
மழைக்கால மாலை நேர
குளிர்த் தென்றலாய் நீ
சில்லென்று வீசுகிறாய்
நானோ
மூச்சை உள்ளிழுக்கவும் தெரியாமல்
வெளிவிடவும் பயந்து
ஏதும் புரியாது
நெஞ்சு படபடக்க
கோடைகால வெம்மையாய் !
உனைச் சந்தித்துவிட்டேன்.