விதியின் விளையாட்டு17

மதனுக்கு அழைப்பை கொடு என்று சொல்லி ஷிவானி செல்போனை ரிஷானியிடம் கொடுத்தாள்.........

ரிஷானி அவனுக்கு அழைப்பை கொடுத்தாள் "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் வேறு அழைப்பிலிருக்கிறார்"என்று சொல்லிக்கொண்டே இருந்தது..........!

விரக்தியில் செல்போனை கீழே வைத்தாள் ரிஷானி.

நான் கிளம்புறேன் நாளைக்கு கல்லூரிக்கு வருவா? இல்ல! பார்க்கலாம் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு ரிஷானியின் தோழி கிளம்பினாள்.

மதன் அழைப்பை எடுக்காததும் அவனிடம் பேச முடியாமல் இருப்பதும் மிகுந்த வேதனையாக இருந்தது ரிஷானிக்கு,,,,,,,,,,,,

--------------------------------------------------------------------------
மதனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய மதனுக்கு சற்று பயமும் கலக்கமும்தான் ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "ஹலோ சார் சொல்லுங்க"என்று சொன்னான்.

மறு முனையில் பேசிய போலிச் அதிகாரி வினோத் ஹலோ மதன் நான் நிஷா கேஸ் விஷயமா உங்ககிட்ட பேசணும் உடனே கிளம்பி மருத்துவமனைக்கு வாருங்கள் என்று சொன்னார்.

சரி சார்! என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் என்ன செய்வதென்று அறியாமல்
விழித்துக்கொண்டிருந்தான்.........

ஒருவேளை நிஷாவுக்கு ஏதாவது??????என்றவன்....

இல்லை இப்படி ஏன் யோசிக்கிறேன் கடவுளே அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டான்......!

செல்போனில் ரிஷானி பலமுறை அழைத்திருப்பதை பார்த்தவன் பேசணுமா?
வேண்டாமா?என்று யோசிப்பதற்குள்.....அவன் தங்கை வரவே என்ன அண்ணா செல்லை வைத்து விட்டு யோசனை அண்ணிக்கிட்ட பேசவா????என்றாள்.


ம்.....இன்னும் பேசவில்லை அதான்......என்று இழுத்தான் மதன்!!!!!!!!

இதற்கெல்லாம் நேரம், காலம், யோசனை எல்லாம் தேவையே இல்லை அண்ணா உடனே எடுத்து பேசுங்கள் என்று அவள் நம்பரை அழுத்தி அழைப்புக்கொடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு....

ஆர......அமர உட்கார்ந்து பேசு அண்ணா நான் அப்புறம் வந்து அண்ணிக்கிட்ட பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.....!

மதனின் அழைப்பை பார்த்ததும் ரிஷானி சந்தோஷமாக போனை எடுத்து பேச ஆரம்பித்தாள் ஆனால் மதனோ மேலே பேசாமல் கொஞ்சம் வேலை இருக்கிறது முடித்ததும் வந்து பேசுறேன் என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.

ஏமாற்றத்துடன் ரிஷானி போனை வைத்தாள்.......

தனது நண்பனை அழைத்து அவனுடன் மருத்துவமனைக்கு சென்றான் மதன்....அங்கு நிஷாவை அட்மிட் செய்த ரூமில் போலிஸ் அதிகாரி இருக்க உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்டமாக இருந்தது அந்த இடம்......


மதனும் நண்பனும் பரிதவிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு போலிஸ் அதிகாரியை பார்ப்பதற்காக உள்ளே செல்ல முயற்சித்தனர்....,,,,,??????

அப்போது ஒருவர் மதனின் கைகளை பிடித்து விட்டு "என்னை மன்னித்து விடுப்பா மதன்" என்று கண்ணீர் மல்க மதனின் கைகளை பிடித்துக்கொண்டு கதறினார்.............





விதி தொடரும்........

எழுதியவர் : ப்ரியா (7-Apr-14, 2:22 pm)
பார்வை : 232

மேலே