எழுத்துகாம் ஒரு விமர்சனம் 3

ஒரு முழு நிலா,
ஒரு முழு மலர் ,
ஒரு மழலை ......என நமதுப் பார்வைக்கீற்றுகள் நமக்கு உச்ச உவகையை அளிக்க வல்லவை எனில் ,

ஒரு நிலாக் கூட்டம்
ஒரு மலர்த்தோட்டம் ,
ஒரு மழலைப்பட்டாளம்........
உங்களைச்சுற்றி எனில் ..????
உங்கள் மன ஓட்டம் எப்படி இருக்கும்?

மேலும் இவையாவும் இளவயதுப் போர்வைக்குள் எனில் ..??

இதையேத்தான் அதிர்ச்சி என முன் பகுதியில் குறிப்பிட்டேன்...!!!உலகளாவிய அளவில் தமிழ்ப் பரப்புரை நிகழ்த்தும் ஒரு மானுடன் பற்றிய வெளி சாயல் எப்படி இருக்கும்...?
நிலாவா...மலரா...மழலையா...
இளவயது நிலாவா...இளவயது மலரா...இளம்பிள்ளை மழலையா...??

ஆம் ,நான் கண்டது -ஒரு நிலவின் ஒளியுடன் மலரின் மென்மையால் ஆக்கப்பட்ட ஒரு மழலை முகம்... !!!

இதுதான் உண்மை...

துள்ளும் வாலிப வயது...இவ்வயதிற்கானவை ஏராளமாய் தாராளாமாய் குவிந்து கிடக்கும் இப்புவியில் இந்த வயதில் திரை கடல் ஓடி திகட்டா பெரும் பொருள் நாடி வாழவும் செல்வம் குவிக்கவும் ஊழியம் செய்யவும் வழிவகை வழிந்தோடும் நிலையில் ஊழியத்தோடு தமிழ்ச்சேவை செய்யும் வயது என்பது அந்திப்பொழுதாக வாய்த்திருந்தால் எனக்கு அதிர்ச்சி எழுந்திருக்க நேர்ந்திருக்காது...

உதிக்கும் பொழுதில் உள்ள வயதில் எப்படி மொழிப் பணி குறித்து சிந்தனை தோன்றியிருக்கும்...? அப்படி என்ன பொருள் ஈட்டிட இப்பணியில் வழிவகை இருக்க முடியும்..? இப்படித்தான் எனக்கு அதிர்ச்சி அலைகளுக்குள் நான்!!!

ஆம் , நான் சந்தித்த தோழர். ராஜேஸ்குமார் மிக மிக இளவயதினர்...ஒரு 35க்குள் உள்ள வயது...!!முதல் பிரமிப்பு.எனக்கு...!(இந்த தவமணி தோழர் முந்திக் கொண்டு புகைப்படம் போட்டுவிட்டார்.. நன்றி தோழா...! )

அடுத்தது அங்கு ஒரு கூட்டு முயற்சியின்
முதிர்ச்சியைக் கண்டேன்...இது இரண்டாவது அதிர்ச்சி..!!

நான் முன்பே குறிப்பிட்டவாறு அந்த மென்பொருள் கட்டமைப்பில் எவரும் இளைஞர்தான்-...உடலாலும் உள்ளத்தாலும் ஆக்கப்பூர்வ செயற்பாடுகளாலும்...!!

"வணக்கம் . நான் அகன் வந்துள்ளேன் .இவர் எனது குரு கவிஜி...இவர் அவரின் தோழர் கமலக்கண்ணன்.எனது தோழன் பொள்ளாச்சி அபி வர இயலவில்லை "அறிமுகப் படலம் இவ்வாறு தொடங்குவதற்கு முன்பு , எங்களுக்கு ஒரு உபசரிப்பு நடந்தது....அது மற்றும் ஓர் அதிர்ச்சி...! அது என்ன...?

(தொடரும்....)

எழுதியவர் : அகன் (7-Apr-14, 8:03 pm)
பார்வை : 93

மேலே