தடையை தாண்டி வருவாயா

நீ இருக்கும் போது உன்னால் தான்
இத்தனையும் என்பது எனக்கு பெரிதாய் தெரியவில்லை..!
நீ போனப் பின்பு உன் பெயரை உச்சரிக்காமல்
என் உதடுகளால் இருக்க முடியவில்லை..!

பகலில் எனக்கு தெரிந்தே நீ சென்ற பிறகு
வரும் உஷ்ணத்தை எப்படி நான் தாங்கிக்கொள்வது..!
இரவில் நீ சொல்லாமல் போனனைத் தெரிந்த பிறகு
என் விழிகளை எப்படி நான் தூங்கச்சொல்வது..!

நீ இருக்கும் போதே இதுப்போல் உன்னை பற்றி
எழுதிடத்தான் பேனா எடுத்தேன்!- ஆனால்
சில நிமிடங்களிலே எப்பொழுதும் போல
சொல்லாமல் சென்றுவிட்டாய்..!

என் எண்ணத்தை காகிதத்தின் வழியாக சொல்லி
முடிக்க முடியவில்லை என்பது தான் வருத்தம் எனக்கு..!

விண்ணை தாண்டி வர நான் உன்னை சொல்லவில்லை..!
"மின்சாரமே"! தடையை தாண்டி சிறிது நேரம் வா
உன்னை பற்றி நான் எழுதி முடிக்கும் வரை..!

எழுதியவர் : Jaya Ram Kumar (8-Apr-14, 8:34 pm)
பார்வை : 181

மேலே