என் காதல் கதை பகுதி 20

தொடங்கும்போதே முடிவை தேடும்
முடிவான பயணம் எனது ஆகும்
தோற்று தோற்று எந்தென் கவனம்
அமைதி தேடி மனது அலையும் .....

நேசம் தொடங்கும் நேரம் வரைக்கும்
வெறுக்கும் மனசே விரும்ப பிடிக்கும்
விரும்பும் மனசை விலக்க மட்டும்
விளக்கம் தேடி இதயம் துடிக்கும் ....

விரும்பும் மனதை ஏற்று கொண்டு
வாழ்க்கை பயணம் நடத்தி கொள்ள
சமயம் அது அமைந்து போனால்
செய்கை கூட செயல்கள் ஆகும் ...

குடும்ப சுமைகள் என்னை நெருக்க
கடமை என்னும் சுமைகள் சுமக்க
என் வேதனை எங்கு உரைக்க
ஓடும் வாழ்க்கை என் சங்கு தெறிக்க ....


இன்னும் தொடரும் என் காதல் கதை .......

எழுதியவர் : ருத்ரன் (9-Apr-14, 4:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 75

மேலே