என்றென்றும் நட்புடன்
என்றென்றும் நட்புடன்
நந்தவனத்தில் நுழையும் கற்றாய்
பூமி தொடும் மழையாய்
உத்தரவு இன்றி உள் நுழைந்தவளே!
தூரத்தில் இருந்தாலும் மறவாதே
துயரம் வந்தாலும் விலகாதே..
நட்புகள் துடிக்கும் - அதில்
பிரிவுகள் வலிக்கும்..
தினமும் கொஞ்சம் சேட்டை
வாய் நிறைய அரட்டை...
ஓடி போகும் காலங்களில் - நிதமும்
புதுப்புது சொந்தங்கள்..
ஓடாமல் நிற்கும் - அது
நம்மக்காக காத்திருக்கும்....
வினயமற்ற புன்னகை
வீழ்ந்தும் எழும் தீர தன்னம்பிக்கை..
விஷத்தையும் அமிர்தமாக்கும் பேச்சுக்களால்
என் இதயம் நான் எழுதிய
வார்த்தைகள் அழகானது உன்னால்...
என்னை நானே ரசிக்க முயன்றதும்
அர்த்தம் இன்றி என்னென்னவோ - தானே
வாசிக்க முயன்றதும்
அத்தனையும் நீயாக இருப்பதனால்...
முகவரி இல்லாத இடத்தில கூட
'முகவரியை தேட வைத்தாய்...
மூச்சுக்கு முண்ணூறு தடவை - உன் பெயர் சொல்ல வைத்தாய்...
எப்படி இருந்தாய்....
எப்படி மாறினாய்...
எது மாற்றியது உன்னை...
என்றெல்லாம் கேட்கபோவது இல்லை.
எதையும் கேட்கும் மன நிலையில்
இப்போது நீயும் இல்லை...
கேள்விகளின் நியாயத்தை உணர முடியாத வரை
பதில்களில் உண்மையிராது...
சாவிகள் உள்ளே இருந்தும்
உள்ளக்கதவுகள் திறப்பது இல்லை.
அறியாமை, அறியவிடமை
பூட்டி வைத்திருகின்ற போது..
எழுதிவிட்டு சென்ற காற்றுக்கு
ஓவியம் தெரிவதில்லை....
ஓவியம் வரைந்த காகிதத்துக்கு
எழுத்துக்கள் புரிவதில்லை
பார்வையில் ஆயிரம் தோன்றினாலும் - என் பார்வையில் நின்றவள் நீ...
போய் வா என்று - இதயம்
புன்னகைக்க....
போகதே என்று - விழிகள்
கண்ணீர் சிந்த
எதனுடன் ஆரம்பிப்பது பயணத்தை..
நிச்சயம் ஒருநாள் சிந்திப்போம்
என்னும் நம்பிக்கையில்
பிரிவதை விட - என்றும்
நினைவுகளுடன் கலந்து இருப்போம்
என்னும் நம்பிக்கையில்
பிரிந்த நினைவுகளுடன்
என்றும் இணைந்து இருப்போம்...
நட்புடன்.
லோ. மேரி டெல்சியா