அனுபவத்தால் உணர்ந்தேன்
உச்சி வெய்யிலில்
உன் நினைவுடன் சென்றேன்
உச்சந்தலை குளிர்ந்ததே தவிர
சுடவில்லை ....!!!
தன்னம் தனியே
பயணம் செய்தேன் உன்
நினைவை துணையாக
கொண்டு பயண சுமை
தெரியவில்லை ....!!!
காதல் சுமைகளை
சுகமாக்கும் என்பதை
அனுபவத்தால் உணர்ந்தேன் ...!!!