புன்னகை பூவிற்கு அண்ணனின் பிறந்த நாள் வாழ்த்து
கருவுடன் எனக்காய்
போராடி வென்று .. !
மண்ணில் பிறந்து
அண்ணன் என
உரிமை தந்தாய்
அழுது கொண்டே ..!
என் விருப்பமாய்
உன் பெயர்
"பாரதி " என
பலர் அழைக்க ...!
எதையும் கேட்கும்
உன் உரிமை
அதையே இரசிக்கும்
என் இளமை ..!
உன்னில் எனை - நான் காண
புதுவித பயணம்
புத்துணர்ச்சியுடன்...!
வருடம் எல்லாம்
வன்சொல் பல தாங்கி
வாழ்க்கை நகர ..!
இல்லாமை என்றும் வீட்டில்
விளக்கொளியில் விடியல்
தேடி நம் பயணம் ...!
தவறு எனில்
தந்தையையும்
தட்டி கேட்கும்
தனித்துவம் உன்னில் ..!!
சிறுமியின்
சிந்தை சிகரமே
உணர வைத்தது
உன் செயலே...!
என் தங்கையே - உன்
கண்முன் காணும் காட்டில்
பாதம் வைத்து
பாதை அமைத்து
பயணம் தொடங்கு ..!
எல்லை தொட்டு
என்னை பார்
வெற்றி இரசிக்க
அருகில் அண்ணன் ..!!
பாரதி கண்ட
புதுமை பெண் - அறியேன்
நான் காணும்
புதுமை பெண் நீயே
"பாரதியாய்""...!!
எண்ணம் எல்லாம்
ஏமாற்றினாலும்
இலக்கை எட்டும் - உன்
குணம் இன்னும் வளர ...!
சித்திரை திருநாளில் - நீ
சிரித்து கொடுக்கும்
புன்னகையை சிதறாமல்
இரசித்து இரசித்து
வாழ்த்துகிறேன் - என
செல்ல தங்கம் நீ உயர ... !
--- அன்புடன் அண்ணன் இராஜ்குமார்
===============================================
சித்திரை திருநாளில் (ஏப்ரல் 14 - இல் )
பிறந்த நாள் காணும் தங்கை பாரதிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
==============================================