முக்கியம்

மண்ணிற்குள் இருப்பதால்
வேரின் பண்பை
மறக்க முடியுமா?
நீருக்குள் இருப்பதால்
மீனின் சுவையை
மறக்க முடியுமா?
சிப்பிக்குள்ளே இருப்பதால்
முத்தின் தரத்தை
குறைக்க முடியுமா?
எதனுள் இருக்கிறோம் என்பது
முக்கியம் அல்ல
எப்படி இருக்கிறோம்
என்பதே முக்கியம் !!!