இந்த கண்ணீர் பூஜை!

மனமே கொஞ்சம் மறந்திட கூடாதா?
நினைவே விட்டு விலகுதல் ஆகாதா?
உயிர் கொஞ்சம் கிழித்து
எழுதிய பின்னே
உறவுகள் விலகி போவதில்லை பெண்ணே.
நீ கொஞ்சம் பொறுத்தால்
காதலை நினைத்தால்
எல்லாம் கற்றுத்தரும்
காதலை நம்பு உறங்கிடு இன்று.

நீ ஒரு ஓடம், நான் அதில் நீராய்
இருந்திட ஆசை கொண்டேன்.
நீ தந்த பாசம் இல்லை அதில் வேஷம்
அதனால் காதல் கொண்டேன்.
உன்னை இங்கும் விட்டு தர
எனக்கில்லை ஆசை.
மௌனம் போல் உலகில் சிறப்பில்லை பாஷை.
என்னை தனிமையில் விட்டுவிடு
உன்னை மறவேன்,
நீ நம்பினால் உன்னை கொடு.

கண்களில் நீரும், கடலென பெருக
வழிகின்ற நீரில் நீ மெல்ல தெரிய
கண்களை வெறுக்கின்றேன்.
நீ விழுவாய் என்று..
தினம் தினம் துடிப்பேன்
மறைத்தே அழுவேன். நீ அழுவாய் என்று!
விலகி இருப்பதால் அது விடையில்லை அன்பே.
ஊடலுமில்லை இதுவும் காதல் என்பேன்.
உள்ளங்கை உன்னை அதில்,
வைத்தே வாழ்ந்திட ஆசை.
நீ கலங்காதே உன் நினைவால்
இந்த கண்ணீர் பூஜை!

எழுதியவர் : கவிசதிஷ் (1-Jun-10, 4:11 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 1201

மேலே