எழுமை

நான் திருச்சி பேருந்துநிலையத்தில் என் தம்பியின் வருகைக்காக காத்திருந்தேன். என் அருகில் ஒரு நான்கு பேர் இருந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் அருகில் ரொம்ப வயது முதிந்தவர். கடைசியாக ஒரு முறுக்கு பொட்டலத்தை காட்டி எங்களிடம் முறுக்கு வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டீருந்தார் . நாங்கள் நால்வரும் அவரை பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் அது யாருக்கும் தேவை படவில்லை என்றால் நான் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தேன் . எங்கள் அருகில் ஒரு அம்மா இரண்டு பெண்களுடன் ரொம்ப ஏழ்மையான கும்பம் என்று தெரிகிறது அவர்களின் தோற்றம் அப்படிதான் இருந்தது. அந்த பெரியவரை நோக்கி அந்த அம்மா முறுக்கை வாங்கிக்கொண்டு சொன்ன வாரத்தை நான் கொடுக்கும் பணம் முறுக்குக்காக இல்லை உங்களுக்காக கொடுக்கிறேன். ஆனால் அந்த அம்மாவுக்கு அந்த பத்துருபாய் பெரிய தொகைதான். ஆனால் எழுமையாக சொல்லிவிட்டு போய்விட்டார்கள். நான் அந்த அம்மாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். நிறைய படித்து என்ன பயன். அப்படிதான்

எழுதியவர் : (11-Apr-14, 7:55 pm)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : ezhimai
பார்வை : 66

மேலே