ஆட்டோகிராப்
வாழ்க்கை எனும் பயணத்தில்
கல்லூரி எனும் இனிய நிறுத்தத்தில்
கடந்த கால மலரும் நினைவுகளை
கருவிழியில் சுமந்தபடி
கடந்து செல்ல காத்திருக்கும்
என் அன்புத் தோட்டத்தில் பூத்த
அழகிய மலர்கொடியே!!!
முதலாமாண்டு முதல் நாளில்
கல்லூரி எனும் வேடந்தாங்களில்
மிரட்சியுடன் கூடிய கண்ணீர் - கண்களில்;
காரணம்-புதியவர்கள்,பரிச்சியமற்றவர்கள் நிறைந்த கனவு உலகின் நடுவில் நீ!
இன்று இறுதி ஆண்டு; இறுதி நாட்கள்....
அதே கண்கள் அவற்றில் கண்ணீர்
மனதில் பாரம்,மறக்க முடியாத நேசம்
காரணமாய் அமைந்ததோ நண்பர்களின் பிரிவு!
பிரிவை தடுக்க இயலாது ; தவிர்க்கலாகாது
புதுப்பித்து கொள்ளலாம் அறிவியலின் படைப்புகளால்.......
அன்னமும் அதிசயுக்கும் அழகு சிலையான
உன் பயணம் இனிய அனுபவங்களுடன் தொடர
என் வாழ்த்துக்கள் ...............................>