பேதையின் போதை

தட்டு தடுமாறி கொண்டிருந்த இளங்கொடிக்கு
இளம்பருவ அரச மரம் இனிய அன்பு காட்டி
தன்னுடலை தானமிட்டு அரவணைத்தது
கொடியின் கொஞ்சும் அரவணைப்பு
அலாதி இன்பம்தான் ஆரம்பத்தில்
காலம் கழிய கழிய கொடியின் கொடிய
அன்பினில் சுயமின்றி சுணங்கியது
அந்த அபலை அரசமரம்