காதலி
எரியாத தீ மூட்டிய தீ
எரிகிறது என்னுள் அனையாமல் ...!
சுடுகிறது எனக்கும் உன்
மௌனம் மட்டும்...!
சுகமாகத்தான் இருக்கிறது எனக்கு
இந்த வலி ...!
உன் குரல் கேளாத இந்த ஒரு வாரம்
தோன்றுதடி எனக்கு ஓராயிரம்
யுகமாக...!
பொருளறியா பாடல் வரியாய் தோன்றுதடி
எனக்கு நீ இல்லாத
வாழ்கை ...!
1330 குறள் தரா பொருள் தருமடி உன்
ஒற்றைக் குரல் ...!
ஒருமுறை அழைப்பாய ...!
எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என் அலைபேசியுடன் ...!
இந்திரலோகம்கூட இறங்கி வரலாம் எனக்காக
உன்னைதேடி ...!
அத்துணை அழகா நீ ...!
ஆம்...!
பார் அறியாத ரதியல்லவா
என் பாரதி ...!
என்றும்
என் காதலி ...!
என்றாவது என்னைக் காதலி ...!