திருமணம்

உன்னில் பாதியாய்.....
ஒர்புது உறவு சேர...
உலகம் அதையே
திருமணம் என்கிறது...!!

கடல் என்ற திருமண வாழ்வில்...!
ஆண் என்பவன்
கணவன் என்ற பதவி ஏற்க ....
பெண் என்றும் மனைவி என்ற
சேவகியாக பொறுப்பேற்ப்பாள்..

குளத்து மீனாய் தாய் வீட்டில்
இருந்தவளோ....
திருமணத்தால் கடல் என்ற புகுந்தவீட்டில்
இடம்பெயர்வாள்..!

குளத்து நீராய் தாய்வீட்டை .
மனதில் கொண்டு...
புகுந்த வீட்டில் பழகநினைக்க
உவர்க்கும் நீராய் புகுந்தவீட்டில்
மாற்றம் தெரிய...
உணரும் இழப்பை.. மனதில் மறைத்து
முன்கத்தில் சிரிப்பாள்... !

பெண் என்பவள் உவர்க்கும்
மாற்றம் விரும்பிவாழ
வாழ்க்கை மாற்றம் பழகும்...
அவளோ..வெறுத்து வாழ
வாழ்க்கை என்றும் பாழாகும்...!

சகிக்கும் மனது அவளிலிருக்க..
சுமக்கும் துயரை சிரிப்பில்
மறைப்பாள்...!
பெண்ணின்விதி..
புதுஉறவில் விரும்பிவாழ்ந்து...
மனதின் விருப்பம் உள்ளில் மறைப்பது...!

ஆணின்மதி அவள் உணர்வு
மதித்தறிந்து இணைபிரியாது வாழ்வது.....
வாழும் விதம் தானறிந்து
வாழும் வரை....
நல்லுறவும்
சுவை மறைத்த சுமையே.....!!!

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (13-Apr-14, 11:12 pm)
Tanglish : thirumanam
பார்வை : 262

மேலே