புதுமை புரட்சி

ஏழை ஒருவன் பசியால்
வாடும் போது

விவசாயி விளைபொருள்
லாபமில்லாமல்
தற்கொலை செய்யும் போது

பெண்ணெருத்தி பாலியல்
துன்பப்படுத்தப் படும் போது

தாய் மடு கடித்து
பால் வராமல்
ஓர் குழந்தை அழும் போது

உழைப்பாளியின் வியர்வை
ஊதியம் சரியில்லாமல்
வேரறுக்கப்படும்போது

எல்லாம் எண்ணமெங்கும்
வாலிப ரத்தம் கொதித்து

உயிரெனும் உளி
கூர்தீட்டப் படுகிறது

ஓர்
புயல் திருப்ப
புதுமை புரட்சி....செதுக்க...........

எழுதியவர் : m .palani samy (14-Apr-14, 12:33 am)
Tanglish : puthumai puratchi
பார்வை : 93

மேலே