ஆணும் இல்லை பெண்ணும் இல்லை

ஆணும் இல்லை பெண்ணும் இல்லை
ஆண்டவன் படைப்பில் அஃதோர் அற்புதம்
சொர்க்கமும் இன்றி நரகமும் இன்றி
மார்க்கம் கண்டார் திரிசங்கு அன்று
எத்தனை காலம் இவர்கள் சகிப்பார்
சித்திர வதைகள் மற்றவர் கையில்
உச்ச நீதி மன்றம் இவர்கள்
அச்சம் விடுக்கத் தீர்ப்பும் தந்தார்
இறைவனைக் காண விழையும் மனிதர்
இவர்களைக் கண்டால் முகங்கள் சுழிப்பார்
அர்ஜுனன் போல சிறப்புடன் வாழ
வழிகள் காட்ட வேண்டும் அரசு