தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு
அன்று மட்டும்
தமிழை புகழும்
மனங்கெட்ட தமிழா..
விடுமுறை கிடைப்பதால்
ஏனோ புகழ்கிறாயோ...?
உலகம் ஆள பிறந்த
மூத்தகுடியட..
பிற மொழிக்கு அடிமையாய்
வாழ்வது பெருமையாட உனக்கு...?
முடங்கி கிடக்கும் தமிழா
முட்டி மோதி வெளியே வா...!
தமிழின் பெருமையை
உலகிற்கு சொல்...!
தமிழரெனும்
கர்வம் கொள்...!
திமிர் கொள்...!
பெருமை கொள்...!
தமிழ் என்னுயிரினும்
மேலானது என்று சொல்...! இன்று மட்டுமில்லாமல்
என்றுமே தமிழை போற்றுவோம்...!
தமிழன்னை ஈன்ற
தமிழ்மகனின்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உலகத் தமிழர் அனைவருக்கும்...!

எழுதியவர் : கோபி‬ (14-Apr-14, 4:04 pm)
பார்வை : 85

மேலே