நீ மறந்து போனதில்
மரணத்தை சந்திக்காமல்
வலியை உணர்ந்து விட்டேன்
நீ மறந்து போனதில்.
தனிமை மட்டும்
சூழ்ந்த நிலையில்
உன் ஓசை சுட்டெரிக்க
நினைவை இழந்துவிட்டேன்
நீ மறந்து போனதில்.
நடைபோட கால்கள் இருந்தும்
ஊமையாய் உன் பாதையில் கிடந்துவிட்டேன்
நீ மறந்து போனதில்,
கண்ணீரே இல்லையென
கண்களும் மெளனமாகவிட்டேன்
நீ மறந்து போனதில்.
நீ மறந்து போனதில்
நான் எதுமாகவில்லை
நீ தந்த காதலுக்கு
உணவாகி, உயிராகி
நீயாக மாறிவிட்டேன்.