உன் தேடல்

வான் மேக ஊர்வலத்தில்
வட்டநிலா கண்ணாம்பூச்சி
தினம் விளையாட...
கண்டு சிரிக்கும் விண்மீன்கள்
ஆங்காங்கே மின்னிமின்னி
நடனமாட..
ரசித்து மகிழும் இயற்கை யாவும்
பனிஉணர்வில் நனைந்து
நிற்கும் தருணம் போல..!
உன் இதழோர சிரிப்பில்
என் மனதோர ஜன்னலில்
மனம்நிறைந்து மகிழ்ந்து
நிற்கும் என்னுயிர்..!
ஓர்நாள் ஓய்வுக்கு நிலவும்
தூரமாய் சென்றுவர..
ஏங்கி தவிக்கும் வான்மேக
விண்மீனாய்..
உன் முகம் பார்க்கா நாள் என்றும்
எனக்கு இருளாகி போகும் கண்ணே..!

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (15-Apr-14, 12:41 am)
Tanglish : un thedal
பார்வை : 121

மேலே