உயிர் மதிப்போம்

பஞ்சம் இன்றி வாழ்ந்திருந்தும்
தஞ்சம் கொள்ள இடமிருந்தும்
உயிர் கொள்ளை கொள்ளும் இனம்
மண்ணில் இன்றும் வாழ்வதேனோ..?

இனம்,மொழி என்று பிரித்து பார்க்க
பச்சை இரத்தம் நம்மில் இல்லை..
சாதி,மதம் களைந்து வாழ
சிவந்த இரத்தம் நம்முயிரில் இருக்கு..!

பிரித்து பார்க்கும் கயவன் இனம்
தனித்து வாழ ஏற்ற இடம் கல்லறைதான்
விரும்பி அவனை கல்லறையில் கண்டுவாழ
கயவன் இனத்தான் போகஎன்றும் நினைப்பதில்லை..!

ஐந்தறிவு ஜீவன்கூட அன்புகண்டு பணிந்திடுமே
மானம் மறைத்து வாழும் மனிதா
தமிழ் இனம் அழிய நீயும் இன்றும் விடுவதேனோ
உயிர் மதிக்கா உன்மனதை இன்று நீயும் கொன்றுவிடு

உயிர் பறிக்கும் மனித இனம் பார்க்கையிலே
என் உள்ளுணர்வு வீறுகொண்டு எழுந்திடுதே
கண்ணின் ஈரம் வற்றாது மழைபொழிந்தும்
மனதின் வலியால் இரத்தமின்றும் கொதித்திடுதே..!

படைத்த இறைவன் பக்கம் வந்தால்
இரக்கம் என்ற உள்ளுணர்வை..
உயிர்பறிக்கும் கயவன் மாற கடன்கொடு
என்று நானும் கதறி உடன் அழுதிடுவேன்..!

..கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (15-Apr-14, 1:29 am)
Tanglish : uyir mathippom
பார்வை : 127

மேலே