இன்னும் என்னில் நீ இருப்பதால் 555
உயிரே...
உன்னை சந்திக்கும் முன்
சோகம் என்றால்...
தனிமையில் இருந்தேன்...
என்னருகில் நீ
இருக்கும் நேரங்களில்
சோகம் என்றால்...
உன் தோளில் சாய்ந்து
கொள்ள சொன்னவள்...
மணமாலை உனக்கு
நான் சூட நினைத்த போதுமட்டும்...
என் கரங்களை
தட்டிவிட்டாயடி...
நீ மணமாலை சூட்டி
விட்டாய் யாருக்கோ...
மரணம் கூட தள்ளி
போகுது எனக்கோ...
வலிக்குதடி
என் உள்ளம்...
என்னைவிட்டு பிரிந்ததால்
இல்லையடி...
இன்னும் என்னில்
நீ இருப்பதால்.....