கிருஷ்ணன் வருவானா
சைபீரியா
குளிர் குறைந்து
வெப்பம் வருடம்தோறும்
வளர்ந்து வருகிறது
சிரபுஞ்சியில்
மழை பெய்தால்
செய்தியாய் ஊடகத்தில்
அதிசயமாய் அறிவிக்கப்படுகிறது
நயாகரா
நீர் வீழ்ச்சி
உறைந்து போன பளிங்கு
கத்திகளாய்த் தொங்குகிறது.
அன்டார்டிகா
பனிக் கரடிகளும் நாய்களும்
கொஞ்ச வருடங்களில்
மிருகக் காட்சி சாலைகளில் ...
ஓசோன்
சேலை இழுத்து
துரியோதனர்கள் நாம்
இயற்கையை
துகிலுரிந்து வருகிறோம்
கிருஷ்ணன்
வருவானா ?